அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவில் வைத்து ஐஸ் போதைப்பொருளுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வாழைச்சேனை காகித ஆலை இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய மருதமுனை விஷேட அதிரடிப்படையினரோடு இணைந்து அக்கரைப்பற்று இராணுவப் புலனாய்வுப் பிரிவினரின் உதவியோடு இன்று இவரை கைதுசெய்துள்ளனர்.
இவரிடமிருந்து சுமார் 13 கிராம் ஐஸ் போதைப்பொருளும், அதனை நிறுக்கப் பயன்படுத்தும் கருவியும், போதைப்பொருள் விற்பனைக்காகப் பயன்படுத்தப்பட்டு வந்த சொகுசு காரும் கைப்பற்றப்பட்டுள்ளது.
குறித்த ஐஸ் போதைப்பொருள் கல்குடா பிரதேசத்திற்கு விற்பனைக்காக கொண்டு வரப்படவிருந்ததாக முதற்கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கைது செய்யப்பட்ட குறித்த நபரை அக்கரைப்பற்று பொலிஸில் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.