இறக்குமதி வரியை அரசாங்கம் நீக்கியுள்ளமையினால் கோழி இறைச்சி,முட்டையின் விலை மேலும் அதிகரிக்கப்படமாட்டாது என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் சரத் ரத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
முட்டையின் உற்பத்தி செலவு குறைந்துள்ளதுடன், தற்போது ஒரு முட்டையின் விலை 23.ரூபா 50 சதத்துக்கு விற்பனை செய்யப்படுகின்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளைக் கோழி இறைச்சியின் விலையை சுமார் 50 ரூபாவினால் குறைக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், தற்போது ஒரு முட்டை 26 ரூபாவிலிருந்தும் 30 ரூபாவுக்கும், ஒரு கிலோ கோழி இறைச்சி 800 ரூபாவிலிருந்து 900 ரூபாய்க்கும் விற்பனையாகின்றமை குறிப்பிடத்தக்கது.