நாட்டின் வீடுகள் மற்றும் வர்த்தகத்திற்காக நாளாந்தம் பயன்படுத்தப்படும் எரிவாயு தேவையை பூர்த்தி செய்ய துரிதமான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக லிட்ரோ கேஸ் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
ஏற்கனவே நாளாந்த தேவைகளுக்கான எரிவாயுவை ஏற்றிய இரண்டு கப்பல்கள் வந்துள்ளதாகவும் நிறுவனம் கூறியுள்ளது. தமது நிறுவனம் சந்தைக்கு தேவையான 80 வீதமான எரிவாயுவை விநியோகித்து வருகிறது எனவும் இந்த எரிவாயு நுகர்வோர் அதிகார சபையின் தரம் மற்றும் கண்காணிப்பின் கீழ் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் லிட்ரோ நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
இதற்கு முன்னர் சந்தைக்கு விநியோகிக்கப்பட்டுள்ள கறுப்பு மற்றும் நீல நிற முத்திரையுடன் கூடிய சமையல் எரிவாயு கொள்கலன்களை சந்தையில் இருந்து திரும்ப பெற தொழிற்நுட்ப வழிமுறைகளை கையாண்டு வருவதாகவும் எதிர்காலத்தில் தாமதமின்றி எரிவாயுவை நிறுவனத்தினால் விநியோகிக்க முடியும் எனவும் லிட்ரோ நிறுவனத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.