கடந்த ஓராண்டில் மட்டும் ஆன்லைன் கேம்களை பதிவிறக்கம் செய்வதற்காக, சுமார் 3770 கோடி ரூபாயை இந்தியர்கள் செலவழித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலகையே கொரோனா வைரஸ் ஆட்டிப்படைத்து வருவதால், டிஜிட்டம் மோகம் அதிகரித்து வருகிறது. வீட்டிற்குள்ளே முடங்கி கிடக்கும் மக்கள் ஆன்லைன் கேம்களுக்கு அடிமையாகி வருகின்றனர்.
இது குறித்து சந்தை ஆலோசனை நிறுவனமான நிக்கோ பார்ட்னர் வெளியிட்டுள்ள தகவலில், கூகுள் ப்ளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ப்ளே ஸ்டோர் மூலம் ஆன்லைனில் கேம்களை இந்தியர்கள் அதிகளவில் பதிவிறக்கம் செய்துள்ளனர்.
இதற்காக, அவர்கள் கடந்த ஓராண்டில் 3770 கோடியை செலவழித்துள்ளனர். ஆசியாவிலேயே செல்போன் மற்றும் கணினி விளையாட்டுகளுக்கான மிகப் பெரிய சந்தையாக இந்தியா மாறி வருகிறது.
கடந்த 2021-ஆம் ஆண்டில், சந்தையின் வருவாய் சுமார் 4000 கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது வரும், அடுத்த ஐந்து ஆண்டுகளில் 29.8 சதவீதமாக உயரும், அதாவது 11,000 கோடி ரூபாயை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, விளையாட்டு அடிப்படையிலான செயலி வாங்குவது377 கோடியாக இருந்தது. ஆனால், தற்போது இது 10 மடங்காக அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
தற்போது அதிகரித்து வரும், இந்த ஆன்லைன் கேம்களால், அவ்வப்போது தற்கொலை சம்பவங்களும் அரங்கேறி வருவதால், இனி மக்கள் தான் இந்த ஆன்லைன் கேம்களில் விழாமல் விழித்து கொள்ள வேண்டும், எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.