இலங்கையில் பிரதான கோவிட் திரிபாக ஒமிக்ரோன் திரிபு மாற்றமடையலாம் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
எதிர்வரும் சில மாதங்களில் டெல்டா திரிபினை விடவும் கூடுதல் எண்ணிக்கையிலான தொற்று உறுதியாளர்களுக்கு ஒமிக்ரோன் திரிபு தாக்கும் சாத்தியமுண்டு என தெரிவித்துள்ளனர்.
இலங்கை மருத்துவ ஆய்வு நிறுகத்தின் நுண்மித் தொற்று குறித்த மருத்துவ நிபுணர் டொக்டர் நதீகா ஜானகே இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மருத்துவ ஆய்வு நிறுகத்தில் கண்டறியப்பட்ட 10 ஒமிக்ரோன் தொற்றாளர்களில் இருவர் மட்டுமே வைத்தியசாலைகளில் அடையாளம் காணப்பட்டவர்கள் எனத் தெரிவித்துள்ளார்.
ஒமிக்ரோன் தொற்று உறுதியாளர்கள் சமூகத்தில் இருக்கலாம் என்பதனை ஒப்புக்கொள்ள வேண்டுமெனவும் சமூகத்தில் பரவியிருக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தடுப்பூசி ஏற்றிக் கொண்டவர்கள் மத்தியிலும் ஒமிக்ரோன் பரவுவதாகவும், டெல்டாவை விடவும் கூடுதல் வேகத்தில் பரவுவதாகவும் பிரித்தானிய விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
புத்தாண்டு காலத்தில் மக்களின் செயற்பாடுகளினால் ஒமிக்ரோன் தொற்று உறுதியாளர் எண்ணிக்கையில் அதிகரிப்பு பதிவாகலாம் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.