ஆசியாவின் ராணி என பெயரிடப்பட்டுள்ள இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட 310 கிலோ கிராம் எடை கொண்ட நீலக்கல்லின் பெறுமதி 200 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.
பிரான்சில் உள்ள மாணிக்கக்கல் ஆய்வாளர் ஒருவர் இந்த கல்லின் பெறுமதியை மதிப்பிட்டுள்ளதாக கல்லின் உரிமையாளர் கூறியுள்ளார்.
ஹொரனை பகுதியைச் சேர்ந்த சமீல சுரங்க பன்னிலாரச்சி என்பவருக்கு சொந்தமான இந்த கல்லை, டுபாயில் உள்ள நிறுவனம் ஒன்று 100 மில்லியன் டொலர்களுக்கு வாங்குவதற்கு விருப்பம் தெரிவித்தது.
எனினும் இலங்கை அதிகாரிகளும், அந்த கல்லின் உரிமையாளர்களும் இந்த வாய்ப்பை மறுத்துள்ளனர்.
இந்த நிலையிலேயே பிரான்ஸில் உள்ள மாணிக்கக்கல் ஆய்வாளர் ஒருவர் இந்த கல்லின் பெறுமதி 200 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என மதிப்பிட்டுள்ளதாக அதன் உரிமையாளர் கூறியுள்ளார்.
எனவே தொடர்ந்தும் விலை பேரம் பேசப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.