உள்நாட்டு யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் கூட மக்கள் தற்போது எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளை போன்று, அப்போது எதிர்கொள்ளவில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
தற்போது கட்சி, இன, மத பேதமின்றி அனைத்து மக்களும் உண்ண உணவின்றி தவிக்கின்றனர். தற்போது மக்களின் கண்கள் திறக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்