யாழ். சித்தங்கேணியில் பிறந்து 52 நாட்களான சிசு ஒன்று இன்று அதிகாலை உயிரிழந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
நள்ளிரவு பால் குடித்துவிட்டு உரங்கிய குழந்தை இன்று அதிகாலை 3.30 மணியளவில் மூக்கால் இரத்தம் வந்து, மூச்சிபேச்சு இன்மையால் யாழ், வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது ஏற்கனவே குழந்தை இறந்து விட்டதாக வைத்தியசாலையில் கூறப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து யாழ். திடீர் மரண விசாரணை அதிகாரி ந.பிறேம்குமார் மேற்கொண்ட விசாரணையில் பால் புரைக்கேறியதால் குழந்தை இறந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.