போகி பண்டிகையான இன்று தமிழக பொதுமக்கள் பழைய பொருட்களுக்கு எரியூட்டி கொண்டாடினர்.
பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் இன்று போகி கொண்டாடப்படுகிறது.
இதையடுத்து, போகி பண்டிகை இன்று அதிகாலை கொண்டாடப்பட்டது. போகியையொட்டி பொதுமக்கள் தங்கள் வீட்டின் வாசல் முன் பழைய பொருட்களை போட்டு தீயிட்டு கொளுத்தினர்.
சிறுவர்கள் கூட்டமாக கூடி மேளங்களை தட்டி போகியை உற்சாகத்துடன் கொண்டாடினர்.
சென்னையில் போகியன்று இன்று அதிகாலை பொதுமக்கள் பழைய துணிமணிகள், பாய் உள்ளிட்ட பொருட்களை தீயிட்டு கொளுத்தியதால் எங்கு பார்த்தாலும் புகைமூட்டமாக காணப்படுகிறது.
சுற்றுச்சுழலை பாதிக்கும் பிளாஸ்டிக், டயர்கள் போன்றவற்றை எரிக்க வேண்டாம் என்று தமிழ்நாடு அரசாங்கம் பொதுமக்களுக்கு கோரிக்கை விடுத்திருந்த நிலையில் அந்த கோரிக்கையை ஏற்று பெரும்பாலானோர் பிளாஸ்டிக், டயர்கள் போன்றவற்றை எரிப்பதை தவிர்த்துள்ளனர்.
எனினும் ஏனைய பொருட்களை எரித்ததால் சென்னை உட்பட்ட மாநிலத்தில் புகையும் சூழ்ந்துள்ளது.