நாடாளுமன்றத்திற்கு வரும் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், விருந்தினர்கள் உள்ளிட்டோருக்கு உணவு மற்றும் பானங்களை வழங்கியமைக்காக மாத்திரம் கடந்த 2020 ஆம் ஆண்டு சுமார் 9 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாடாளுமன்றத்தின் பல்வேறு குழுக்களில் பங்கேற்பதற்காக வரும் அரச அதிகாரிகளுக்கு நாடாளுமன்றமே உணவை வழங்கி வருகின்றது. அதற்காக செலவிடப்பட்ட பணமும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
இதனிடையே நாடாளுமன்றத்தில் உணவு மற்றும் பானங்கள் தொடர்பில் நடக்கும் மோசடிகள் மற்றும் வீண் வீரயங்களை தடுப்பதற்காக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க திஸாநாயக்க (Dammika Dissanayake) அண்மைய காலமாக சில நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
நாடாளுமன்றத்தின் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் நாடாளுமன்றத்தில் இருந்து வெளியில் செல்லும் போது அவ்வப்போது சோதனையிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.