உடல் எடையை சரிசமமாக வைத்து உடல் ஃபிட்டாக இருக்க வேண்டும் என்றே அனைவரும் விரும்புவோம்.
குண்டாக தொப்பையுடன் இருக்கும் பலருக்கும் டயட்டை பின்பற்றி ஒல்லியாக மாறி விட வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கும்.
ஒரு சிலர் இதனை நினைப்பதோடு சரி, இன்னும் சிலர் இதனை ஒரு சில நாட்களுக்கு மட்டுமே பின்பற்றுவார்கள். இது எதுவும் வேண்டாம். கடுமையான டயட் வேண்டாம்.
நமக்கு பிடித்த உணவை தவிர்க்க வேண்டாம், அதே சமயம் இரண்டே வாரத்தில் நீங்கள் விரும்பும் உடல் அமைப்பை பெற ஒரு இயற்கை வழி உள்ளது.
பெரும்பாலான வீடுகளில் இருக்கும் ஓமவல்லி செடியில் வெறும் 7 இலைகள் மட்டும் இதற்கு போதுமாம்.
இதனோடு சேர்த்து நமக்கு புதினா இலைகள், ஒரு இன்ச் அளவு இஞ்சி மற்றும் தயிர் தேவைப்படும். இப்போது இந்த உடல் எடை குறைப்பு பானத்தை எவ்வாறு தயாரிப்பது என பார்க்கலாம் வாங்க.
பானம் தயாரிக்கும் முறை
முதலில் ஒரு சுத்தமான மிக்ஸி ஜாரை எடுத்து கொள்ளுங்கள்.
அதில் ஏழு கற்பூரவல்லி இலைகளை சுத்தம் செய்து நறுக்கி சேர்த்து கொள்ளவும்.
இதனோடு ஏழு முதல் எட்டு புதினா இலைகள், ஐந்து தேக்கரண்டி தயிர் மற்றும் ஒரு தோல் சீவிய ஒரு இன்ச் அளவு இஞ்சி ஆகியவற்றை சேர்த்து கொள்ளுங்கள்.
இதில் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி நுரை பொங்க அரைத்து கொள்ளவும்.
இதனை ஒரு டம்ளருக்கு மாற்றி அரை மூடி எலுமிச்சை சாற்றை பிழிந்து கொள்ளவும்.
கடைசியில் 1/2 தேக்கரண்டி தேன் சேர்த்து கலக்கவும்.
நாம் தயாரித்து இருக்கக்கூடிய இந்த பானம் இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்டு இருப்பதால் இதனால் எந்த வித பக்க விளைவுகளும் ஏற்படாது.