இலங்கைத் தமிழ் கைதியொருவரை, கனடாவிலிருந்து நாடு கடத்துவது குறித்து அந்நாட்டு அதிகாரிகள் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
42 வயதான ஜீவன் நாகேந்திரன் என்ற இலங்கைத் தமிழரே இவ்வாறு நாடு கடத்தப்படக்கூடிய அபாயத்தை எதிர்நோக்கியுள்ளார்.
கைதியொருவர் தாக்குதலுக்கு இலக்காகிய போது அவரை மீட்பதற்கு சென்ற சிறைச்சாலை அதிகாரிகளுக்கு இடையூறு விளைவித்தார் என ஜீவன் உள்ளிட்ட 15 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல் சம்பவத்தில் நபர் ஒருவர் கடுமையான காயங்களுக்கு உள்ளாகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நோவா ஸ்கோட்டியா நீதிமன்றம் ஜீவன் நாகேந்திரனுக்கு நேற்றைய தினம் ஐந்து மாத கால சிறைத்தண்டனை விதித்துள்ளது.
கடந்த 2019ம் ஆண்டு நோவா ஸ்கோட்டியாவின் சிறைச்சாலையொன்றில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஜீவன் நாகேந்திரனுக்கு எதிராக ஏற்கனவே போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் வழக்குத் தொடரப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஏதிலி அந்தஸ்து கோரி கனடாவிற்குள் பிரவேசித்த ஜீவன் நீண்ட காலம் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், ஜீவனை நாடு கடத்துவதா இல்லையா என்பது குறித்து அந்நாட்டு குடிவரவுத் திணைக்களம் ஆராய்ந்து தீர்மானிக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.