பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தனிப்பட்ட செயலாளராக கடமையாற்றிய உதித லொக்கு பண்டார பெருந்தொகை நிதியை மோசடி செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொழும்பு சிங்கள் ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகிந்த ராஜபக்சவின் கணக்கில் இருந்து பணம் காணாமல் போனமை தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், மிகவும் சூட்சுமமான முறையில் அவ்வப்பொழுது பணம் பெறப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
எவ்வாறாயினும், இந்த விடயம் தொடர்பில் எமது செய்திச் சேவை பொலிஸாரை தொடர்புகொண்ட போதும் உறுதிப்படுத்தப்பட்ட தகவலை பெற்றுக்கொள்ள முடியவில்லை.
இதேவேளை, 2015 ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ தோல்வியடைந்த பின்னரும் உதித லொகு பண்டார மஹிந்த ராஜபக்ஷவின் செயலாளராக கடமையாற்றினார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான W.J.M. N லொக்கு பண்டாரவின் மகன் உதித லொக்கு பண்டார கடந்த பொதுத் தேர்தலில் பதுளை மாவட்டத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.



















