தந்தையின் வங்கிக் கணக்கிலிருந்து பெருந்தொகை பணம் களவாடப்பட்டமை குறித்து தமக்கு எதுவும் தெரியாது என விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் வங்கிக் கணக்கு ஒன்றிலிருந்து பெருந்தொகை பணம் களவாடப்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
பிரதமர் மஹிந்தவின் பிரத்தியேக செயலாளர் ஒருவர் இரகசியமாக வங்கி அட்டையைப் பயன்படுத்தி கோடிக் கணக்கான பணத்தை களவாடியுள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து குறித்த பிரத்தியேக செயலாளர் உடன் அமுலுக்கு வரும் வகையில் பணி நீக்கப்பட்டிருந்தார்.
இவ்வாறான ஓர் பின்னணியில் தந்தையான மஹிந்தவின் வங்கிக் கணக்கில் பணம் களவாடப்பட்டதாக கூறப்படும் தகவல்கள் பற்றி தெரியவில்லை என நாமல் கூறியுள்ளார்.
தனக்குத் தெரிந்த வகையில் அவ்வாறான ஓர் சம்பவம் இடம்பெறவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான ஓர் சம்பவம் இடம்பெற்றுள்ளதா என்பது குறித்து தந்தையிடம் கேட்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
வழமையாக தந்தையின் பணத்தை பிள்ளைகளே எடுப்பார்கள் எனவும் இங்கு வேறு ஒருவர் எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.