நாட்டின் வைத்தியசாலைகளில் ஒட்சிசன் தேவை மீளவும் அதிகரித்துள்ளதாக சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
கொழும்பு தேசிய வைத்தியசாலை, பொரளை சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலை, ஹோமகம மற்றும் அங்கொடை தேசிய தொற்று நோய் ஆய்வுப் பிரிவு மற்றும் தனியார் வைத்தியசாலைகளில் ஒட்சிசன் தேவை அதிகரித்துள்ளது.
கோவிட் காரணமாக ஒட்சிசன் உதவியுடன் சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கையில் மீண்டும் அதிகரிப்பு பதிவாகியுள்ளது.
இந்த நிலைமை நீடித்தால் வைத்தியசாலைகளில் நெரிசல் நிலைமை உருவாகும் அபாயம் காணப்படுவதாகவும் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள கோவிட் சுகாதார வழிகாட்டல்களை முழுமையாக பின்பற்ற வேண்டியது மிகவும் அவசியமானது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
சுகாதார வழிகாட்டல்களை உரிய முறையில் பின்பற்றத் தவறினால் பாரதூரமான விளைவுகளை எதிர்நோக்க நேரிடும் எனவும் வைத்தியர் ஹேமந்த ஹேரத் ஊடகங்களின் மூலம் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.