மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இன்று (28) மாலை 6.30 மணி முதல் இரவு 8.00 மணி வரை மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு மின்சக்தி அமைச்சர் காமினி லொகே நுகர்வோருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
மின் விநியோக அமைப்பில் 20 மெகாவாட் பற்றாக்குறை நிலவுவதால் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஏனைய மின் பிறப்பாகிகளில் இருந்து மின்சாரம் பெற்று பிரச்னைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.



















