எதிர்க்கட்சியின் முக்கிய தலைவர்கள் இரகசிய பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளதாக தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
பிரபல ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் அண்மையில் இந்த மூடிய கதவு இரகசிய பேச்சுவார்த்தை நடாத்தப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இந்த சந்திப்பினை ஏற்பாடு செய்திருந்தார் என தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டின் பொருளாதாரப் பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் ஒர் மாநாடு போன்று இந்த கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
எதிர்க்கட்சியைச் சேர்ந்த அனைத்து தரப்புக்களுக்கும் இந்த சந்திப்பில் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
அநேகமான எதிர்க்கட்சிகள் இந்த சந்திப்பில் இணைந்து கொண்டிருந்தன. சஜித் பிரேமதாச, ரணில் விக்ரமசிங்க, ரவூப் ஹக்கீம், ரிசாட் பதியூதீன், சீ.வீ. விக்னேஸ்வரன், கஜேந்திரன் பொன்னம்பலம், எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்டவர்கள் இந்த சந்திப்பில் பங்கேற்றுள்ளனர்.
ஜே.வி.பி.யின் சார்பில் ஹரினி அமரசூரிய இணைய வழியில் இணைந்து கொண்டிருந்தார்.
கலாநிதி சாந்த தேவராஜன், கலாநிதி ரொசான் பெரேரா, கலாநிதி அனில டயஸ் பண்டாரநாயக்க, கலாநிதி நிசான் டி மெல், கலாநிதி ராம் மாணிக்கலிங்கம் ஆகியோர் பங்கேற்றிருந்தனர் என குறித்த தெற்கு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.