யாழ்ப்பாணத்தில் காதல் விவகாரம் காரணமாக வன்முறை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கோண்டாவில் பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்று அத்துமீறிய கும்பல் ஒன்று தாக்குதல் மேற்கொண்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த குழு ஒன்றே இந்தத் தாக்குதலை மேற்கொண்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யபட்பட்டது. இதனையடுத்து சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக வைத்து விரைந்து செயற்பட்ட கோப்பாய் பொலிஸர் சந்தேகநபர்களை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் யாழ் வண்ணார் பண்ணை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் காதல் விவகாரம் காரணமாக இடம்பெற்றுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளது.
கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.