சுவிட்சர்லாந்தில் புதிதாக விழும் பனி தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வானிலிருந்து விழும் பனி பிளாஸ்டிக்காக இருக்கலாம் எனவும்,சுவிட்சர்லாந்து, ஆஸ்திரியா மற்றும் நெதர்லாந்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 43 டிரில்லியன் மினியேச்சர் பிளாஸ்டிக் துகள்கள் சுவிட்சர்லாந்தில் இறங்குவதாகவும் மதிப்பிட்டுள்ளனர்.
சில பிளாஸ்டிக் நானோ துகள்கள் தரையில் செல்லும் வழியில் காற்றில் 1,200 மைல்களுக்கு மேல் பயணிக்கலாம் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
மேலும், ஆண்டுதோறும் 3,000 டன் நானோ பிளாஸ்டிக்குகள் சுவிட்சர்லாந்தில் விழலாம் என மதிப்பிட்டுள்ளனர்.
பிளாஸ்டிக் மாசுபாடு கடுமையான உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தும். தற்போதைய மதிப்பீடுகள் மனிதர்கள் ஏற்கனவே 8,300 மில்லியன் டன் பிளாஸ்டிக்கை உற்பத்தி செய்துள்ளதாக மதிப்பிட்டுள்ளனர்.
இதன் பொருள் பிளாஸ்டிக் நானோ துகள்கள் இறுதியில் இரத்த ஓட்டத்தில் பரவக்கூடும். இப்போது வரை, இது மனிதர்களுக்கு எந்த வகையான உடல்நலப் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பது சரியாகத் தெரியவில்லை என்றும் கூறியுள்ளனர்.