இலங்கை வாழ் மக்கள் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்தினால் மின்சாரத்தை சேமிக்க முடியும் என அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
நாட்டில் உள்ள 7 மில்லியன் மின்சார பாவனையாளர்களில் ஒருவரது வீட்டில் 25 வோட்ஸ் மின்விளக்கை அணைப்பதன் மூலம் மின்சாரத்தை சேமிக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே, அமைச்சர் டளஸ் அழகப்பெரும இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறானதொரு நெருக்கடியான சூழ்நிலையில் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் விளக்குகளை அணைத்து விட்டு சில தியாகங்களைச் செய்யுமாறு வலியுறுத்தினார்.
எங்களுக்கு 7 மில்லியன் வாடிக்கையாளர்கள் உள்ளனர். மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை ஒரு வீட்டில் இந்த 25 வோட் மின்விளக்குகளை அணைக்க முடிவு செய்தால், மீதமுள்ள அளவு ரந்தெனிகல நீர்த்தேக்கத்தை விட பெரியதாக இருக்கும்.
இதேவேளை, நாட்டில் 4,74,000 வீதி விளக்குகள் உள்ளதாகவும் அவற்றில் 18,000 கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் உள்ளதாகவும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார் என அமைச்சரவை பேச்சாளர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.