வவுனியா மாவட்டத்தில் கோவிட் தொற்றாளர்கள் அதிகரித்து வருவதாக வவுனியா பொது வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
வவுனியா மாவட்டத்தில் மக்கள் அண்மைக்காலமாக சுகாதார வழிமுறைகளை சீராக பின்பற்றாமையினாலேயே கோவிட் தொற்றாளர்கள் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாதாரண தடிமன், காய்ச்சல், சளி போன்ற அறிகுறிகளுடன் காணப்படும் நோயாளர்கள் மருத்துவ சிகிச்சையை பெற முற்படாத நிலையில்,மூச்சு எடுப்பதில் சிரமமான நிலையிலேயே வைத்தியசாலையினை நாடுவது பாரிய விளைவுகளை நோயாளருக்கும் மாவட்டத்திற்கும் ஏற்படுத்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அண்மையில் வவுனியா வைத்தியசாலையில் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்ட சடலம் மீது மேற்கொள்ளப்பட்ட முதலாவது பரிசோதனையினை குறித்த நபர் கடும் கோவிட் தொற்றுக்கு உள்ளாகியிருந்தமை தெரியவந்துள்ளது எனவும் வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.