பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முழுமையாக நீக்குமாறு வலியுறுத்தி யாழ்ப்பாணம் நகரில் நாளை புதன்கிழமை கையெழுத்துத் திரட்டும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.
யாழ்ப்பாணம் பஸ் நிலையத்தில்இன்று காலை 9 மணி முதல் முற்பகல் 11 மணி வரை கையெழுத்துத் திரட்டப்படவுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரனின் ஏற்பாட்டில் இடம்பெறும் இந் நிகழ்வில் அரசியல் பிரமுகர்கள் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் பங்கேற்கவுள்ளனர்.