மின்சாரம் மற்றும் எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அனைத்து அரச நிறுவனங்களுக்கும் ஆலோசனைக் கோவையை வழங்குவதற்கு அரச சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தீர்மானித்துள்ளது.
இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக இந்த ஆலோசனைக் கோவை வெளியிடப்படவுள்ளதாக அமைச்சின் செயலாளர் ஜே.ஜே. ரத்னசிறி தெரிவித்துள்ளார்.
அரச நிறுவனங்களில் குளிரூட்டிகள் மற்றும் தேவையற்ற மின் விளக்குகளின் பயன்பாட்டை இயன்றளவு குறைத்துக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.