தற்போதையை அதிக வேக இண்டர்நெட் உலகத்தில், இணைய வேகம் குறைவாக இருந்தால், அது பெரும் பிரச்சனையாக ஆகி விடும்.
சமூக ஊடகங்களில் பதிவிடுதல், தகவல்களை பகிர்தல், யூடியூப், நெட்ஃபிக்ஸ் அல்லது ஹாட்ஸ்டாரில் வீடியோக்களை பார்த்தல் ஆகியவற்றின் போது சிறந்த அனுபவத்தை பெற இண்டர்நெட் ஸ்பீட் என்னும் இணைய வேகம் சிறப்பாக இருக்க வேண்டும்.
இந்நிலையில், மொபைல் இணைய வேகத்தை மேம்படுத்த சில சிறந்த எளிய வழிகள் உள்ளன.
மொபைலின் செட்டிங்ஸில் சில மாற்றங்களைச் செய்தால் போதும், சிறப்பான இணைய வேகத்தை பெறலாம்.
பெரும்பாலும், உங்கள் சாதனம் மெதுவான நெட்வொர்க் அலைவரிசையைப் பிடிக்கும் போது, உங்கள் இணைய வேகம் குறைவாக இருக்கும்.
நெட்வொர்க் வழங்குநர்கள் 4G மற்றும் 3G ஆகிய இரு வகை இணையத்தைப் பயன்படுத்தும் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய வெவ்வேறு அலைவரிசைகளை வெளியிடுகின்றனர்.
அதாவது LTE மற்றும் VoLTE ஆகியவையும் ஒரே நேரத்தில் கடத்தப்படுகின்றன.
சில சமயங்களில், இணையத்தின் அதிக அலைவரிசையை நீங்கள் அணுக முடியாமல் போகும் போது, உங்கள் தொலைபேசி தானாகவே குறைந்த அலைவரிசைக்கு மாறிவிடும்.
நீங்கள் இணைய வசதியை பெற தடங்கள் இருக்கக் கூடாது என்பதற்காக இவ்வாறு செட்டிங்க் செய்யப்பட்டுள்ளது.
உங்கள் நெட்வொர்க் செட்டிங்குகளை மீட்டமைக்கவும்
செட்டிங் செல்லவும்.
பின்னர் மொபைல் நெட்வொர்க்கைக் கண்டுபிடித்து டாப் செய்யவும்.
நெட்வொர்க் ப்ரொவைடர் ஆப்ஷனை தேடி, அதைத் தட்டவும்.
‘செலக்ட் ஆட்டோமேடிக்’ என்பதைத் தட்டவும்.
பின்னர் அதனை ஆப் செய்யவும்.
4G அல்லது LTE நெட்வொர்க்கை எவ்வாறு தேர்வு செய்வது
செட்டிங் செல்லவும்.
அதன் பிறகு கனெக்ஷனுக்கு செல்லவும்.
சிம் கார்டு மேனேஜர் ஆப்ஷனை கண்டறியவும்.
மொபைல் டேட்டா அல்லது மொபைல் நெட்வொர்க்கிற்குச் செல்லவும்.
LTE/3G/2G (ஆட்டோ கனெக்ட்) மீது தட்டவும்.
எக்ஸிட் செட்டிங்கை டாப் செய்யவும்.




















