இந்திய முன்னாள் பிரதமர் ரஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள பேரறிவாளனுக்கு வழங்கப்பட்டுள்ள பரோல் மேலும் ஒரு மாதத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே பரோலில் உள்ள பேரறிவாளனின் பரோல் காலம் எதிர்வரும் 28 ஆம் திகதியுடன் நிறைவடைகிறது.
இந்நிலையில், எதிர்வரும் 28 ஆம் திகதி தொடக்கம் மேலும் ஒரு மாதத்திற்கு பேரறிவாளனின் பிணையை நீடித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பேரறிவாளனின் உடல் நிலையை கருத்திற்கொண்டு பரோல் வழங்குமாறு, அவரின் தாயார் அற்புதம்மாள் கோரிக்கை விடுத்ததற்கு அமைய, கடந்த வருடம் மே மாதம் 28 ஆம் திகதி 30 நாட்களுக்கு பரோல் வழங்கப்பட்டது.
பேரறிவாளன் வீட்டிலிருந்தே மருத்துவ சிகிச்சைகளை பெறுவதுடன், இடைக்கிடையே தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெறுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
30 நாட்கள் பரோல் நிறைவடைந்த நிலையில், கடந்த வருடம் ஜூன் மாதம் முதல் பரோல் காலத்தை நீடித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.