அரச இயந்திரத்தின் ஊடாக மக்களின் எதிர்பார்ப்புகளை வேகமாக நிறைவேற்ற வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பெரும்பான்மையான அரச உத்தியோகத்தர்கள் தமது கடமைகளை நிறைவேற்ற விரும்புவதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டிற்கு அவர்களின் சேவையை திறம்பட பெற அவர்களுக்கு மேற்பார்வை, ஆலோசனை மற்றும் ஊக்கம் தேவை என ஜனாதிபதி கூறியுள்ளார்.
ஆளுநர்கள், அமைச்சுக்கள், மாகாண மற்றும் மாவட்ட செயலாளர்கள் உட்பட அனைத்து உயர் அதிகாரிகளும் தனிப்பட்ட முறையில் தலையிட்டு இதற்கு தலைமைத்துவத்தை வழங்க வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் எதிர்காலத் திட்டங்கள் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அரச அதிகாரிகளுடன் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.