ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முன்வைத்த பிரதான பிரேரணைக்கு ஜனாதிபதியும், பிரதமரும் இணக்கம் தெரிவித்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் இன்று (08) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இவ்வாறு இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
“நாட்டின் நெருக்கடிக்கு மத்தியில் மக்கள் மீதான அழுத்தத்தைத் தணிக்க சில நிவாரணத் திட்டங்களின் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக அனைத்துக் கட்சித் தலைவர்களின் மாநாட்டைக் கூட்டுவதே எங்கள் முக்கிய முன்மொழிவாக இருந்தது.”
அதன்படி இன்று நடைபெற்ற கலந்துரையாடலின் போது ஜனாதிபதியும் பிரதமரும் அதற்கு இணக்கம் தெரிவித்துள்ளனர். நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் இம்மாத இறுதியில் ஜனாதிபதியிடமிருந்து அழைப்பு வரும் என மைத்திரிபால சிறேசேன கூறியுள்ளார்.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் 15 அம்ச தீர்மானம் தொடர்பில் ஜனாதிபதியுடனான சந்திப்பில் கலந்துரையாடியதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.
பிரதமர் மகிந்த ராஜபக்ச, நிதியமைச்சர் பசில் ராஜபக்ச மற்றும் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவும் இந்த கலந்துரையாடலில் இணைந்துள்ளனர்.