இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியையடுத்து தமிழகம், கரையோர பகுதிகளில் பொலிசார் விசேட கண்காணிப்பு நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையின் பொருளாதார நெருக்கடியால் இந்தியாவிற்கு அகதிகள் படையெடுக்கலாமென்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த கண்காணிப்பு நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
பொருளாதார நெருக்கடி நிலையை அடுத்து இலங்கையில் யுத்த காலத்தை போன்று, தற்போதைய காலத்திலும் பெருமளவான அகதிகள் தமிழகத்தை நோக்கி வரலாமென இந்தியா கருதுவதாக அறிய முடிகிறது.
இதன் காரணமாக தமிழக, கேரளா கரையோரங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுள்ளது.
அதேசமயம் இலங்கையின் தற்போதைய ‘பொருளாதார அகதிகளை’ கையாள தமிழக காவல்த்துறை விசேட பொறிமுறையொன்றை உருவாக்கியதாக இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.