மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவில் ஐஸ் போதைப் பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி பி.எஸ்.பி.பண்டார தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுதத் மாசிங்கவின் வழிகாட்டலில் காத்தான்குடி கடற்கரை வீதியில் நேற்று (22) இரவு10 மணியளவில் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின்போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து 9 கிராம் 650 மில்லி கிராம் ஐஸ் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த உள்ளதுடன், இவ் விடயம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



















