நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள இந்த நிலைமைக்கு யார் பொறுப்புக் கூறவேண்டும் என்பது பற்றி ஆராய நாம் இங்கு வரவில்லை, அவ்வாறு ஆராய்ந்தால் வேறு பிரச்சினைகள் பற்றிக் கதைக்க முடியாது, இறுதியில் விஜயன் மன்னர் இங்கு வந்திருக்காவிட்டால் பிரச்சினை இருந்திருக்காது என்ற முடிவுக்குத்தான் வரவேண்டியிருக்கும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான ரணில் விக்மரசிங்க கடும் சீற்றத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் ஜனாதிபதி செலயகத்தில் இன்று சர்வகட்சி மாநாடு நடைபெற்றிருந்தது. இந்த மாநாட்டை பிரதான எதிர்க்கட்சிகள் புறக்கணித்தாலும், ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் அதன் தலைவர் ரணில் விக்ரமசிங்க பங்கேற்றிருந்தார்.
இதன்போது இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் உரையாற்றும் போது நல்லாட்சி அரசாங்கத்தில் ஏற்பட்ட தவறுகள் காரணமாகவே தற்போதைய நெருக்கடி நிலை ஏறபட்டதாக குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு ரணில் விக்ரமசிங்க பதிலளிக்கையில்,
நாடு தற்போது எதிர்நோக்கியிருக்கும் பிரச்சினைகளில் இருந்து மீள்வதற்கான வழிமுறைகள் பற்றி ஆராயவே நாம் இங்கு வந்தோம். மாறாக கட்சி அரசியலை முன்னெடுப்பதற்காக அல்ல.


















