எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்பட்ட போதிலும் பொதுமக்கள் எதிர்ப்பை தெரிவிக்கவில்லை என இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்குச் சென்று அங்குள்ள பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்ததாகவும், இன்னும் இரண்டு நாட்களில் மக்களின் எரிபொருள் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும், தற்போது நிலவி வரும் எரிபொருள் தட்டுப்பாடு இன்னும் இரண்டு நாட்களில் நீங்கும் என்றும், மக்கள் கேன்களுக்குள் எரிபொருளை சேர்ப்பதே தற்போதைய எரிபொருள் தட்டுப்பாட்டுக்குக் காரணம் என்றும் அவர் தெரிவித்தார்.