இலங்கையில் பொருளாதார நெருக்கடி மற்றும் விலைவாசி உயர்வை கண்டித்து கோட்டாபய அரசாங்கத்திற்கு எதிராக சில நாட்களாக மக்கள் ஆப்பாட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
கொழும்பு காலி முகத்திடலிலுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அலுவலகத்திற்கு முன்னால் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதேவேளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ (Gotabaya Rajapaksa) அமைச்சு பதவியை ஏற்க அழைப்பு விடுத்த நிலையில் அதனை பல்வேறு கட்சியிகள் நிராகரித்துள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி, தமிழ் முற்போக்கு கூட்டணி, தமிழ்த் தேசியக் கூட்டணி முஸ்லிம் காஸ்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தமிழ் மக்கள் தேசிய முன்னணி மற்றும் ஐக்கிய தேசியக்கட்சி கோட்டாபயவின் அழைப்பை நிராகரித்துள்ளனர்.