தேவையின் நிமித்தம் விசேட அனுமதி பெற்றவர்களுக்கு மாத்திரம் கலன்கள் மற்றும் பீப்பாய்களில், நிரப்பும் நிலையங்களில் பெற்றோல் அல்லது டீசல் வழங்கப்படுமென இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபன தலைவர் தெரிவித்துள்ளார்.
எனவே, அனுமதி வழங்கப்படாத எந்தவொரு நபருக்கும், பீப்பாய்கள் மற்றும் கலன்களில் டீசல் அல்லது பெற்றோல் வழங்கப்படமாட்டாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
,இதேவேளை,கடந்த திங்கட்கிழமை உடன் நடைமுறைக்கு வரும் வகையில் டீசலை கேன்களில் நிரப்புவதை நிறுத்துமாறு எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தது.
இதன்படி, குறித்த சட்டத்தை மீறும் எரிபொருள் விநியோகஸ்தர்கள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கு இலங்கை பொலிஸ் திணைக்களத்துக்கு அறிவித்தல் விடுத்துள்ளதாகவும் டீசல் விநியோகிப்பவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.