நடிகை காஜல் அகர்வாலுக்கு நேற்று ஆண் குழந்தை பிறந்த நிலையில் சற்றுமுன் குழந்தையின் பெயர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.
நேற்று காஜல் அகர்வால் – கெளதம் கிட்சலு தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது .
தாயும் சேயும் நலம் என்ற செய்திகள் வெளியானது.
இதனை அடுத்து சக நடிகர்-நடிகைகள் மற்றும் ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் சற்று முன் காஜல் அகர்வாலின் கணவர் கெளதம் கிட்சலு தனது சமூக வலைத்தளத்தில் தங்கள் குழந்தையின் பெயரை அறிவித்துள்ளார்.