ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு எதிராக சர்வதேச நாணய நிதியத்தின் தலைமைக் காரியாலயத்திற்கு முன்பாக போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தற்போதைய அரசாங்கத்தையும், ஜனாதிபதியையும் வீட்டுக்கு செல்லுமாறு வலியுறுத்தி இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் வொஷிங்டனில் அமைந்துள்ள சர்வதேச நாணய நிதியத்திற்கு எதிரில் இந்தப் போராட்டத்தை, புலம்பெயர் இலங்கையர்கள் முன்னெடுத்துள்ளனர்.
அரசாங்கத்தை விமர்சனம் செய்யும் வகையில் பல்வேறு பதாதைகளை தாங்கியவாறு இதன்போது போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



















