பிரதமர் மகிந்த ராஜபக்ச எவ்வேளையிலும் பதவி விலகுவதற்கு தயாராகவே இருப்பதாக அரசியல் தகவல்கள் தெரிவிப்பதாக தினக்குரல் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைக்கு மத்தியில் முழு அரசாங்கமும் பதவி விலக வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் முன்வைக்கும் கோரிக்கைகள் தொடர்பில் பிரதமர் அவதானம் செலுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
இதன்படி பதவி விலகுவதற்கு அவர் இணக்கம் தெரிவித்துள்ள போதும், ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தின் சிரேஷ்ட உறுப்பினர்கள் அவரை இந்த நேரத்தில் பதவி விலக வேண்டாம் என்று வலியுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேவேளை இலங்கையின் பணவீக்கம் தொடர்ந்து ஆறாவது மாதமாக உச்சத்தை எட்டியுள்ளதை நேற்று உத்தியோகபூர்வ தகவல்கள் வெளிப்படுத்தியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.



















