இலங்கை வானொலி வர்த்தக சேவையின் சிரேஷ்ட அறிவிப்பாளர்களில் ஒருவரான புவனலோஜினி நடராஜசிவம் காலமானார்.
புவனலோஜினி நடராஜசிவம் நேற்றுமாலை யாழ்ப்பாணத்தில் இயற்கை எய்தியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சைப் பெற்றுவந்த அவர், நேற்றுக் காலமானதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை புவனலோஜினி நடராஜசிவம், மறைந்த மூத்த அறிவிப்பாளர் நடராஜ சிவத்தின் துணைவியார் என்பது குறிப்பிடத்தக்கது.