இலங்கை வங்கி ஊழியர் சங்கம் மற்றும் பல வங்கித் தொழிற்சங்கங்களும் இன்றைய ஹர்த்தாலுக்கு ஆதரவளித்துள்ள நிலையில் வங்கிகளும் மூடப்பட்டுள்ளன.
அந்தவகையில் தொழிற்சங்கங்கள் இன்று முன்னெடுத்துள்ள ஹர்த்தால் காரணமாக நாடு முழுவதும் உள்ள பல பொது மற்றும் தனியார் வங்கிகள் மூடப்படும் என தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, ஹர்த்தால் காரணமாக பல தனியார் வங்கிகளும் அதன் பல சேவைகளை கட்டுப்படுத்தும் முடிவை அறிவித்துள்ளன.