இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு 25 மில்லியன் அமெரிக்க டொலர்களாக குறைந்துள்ளதாக, முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickremesinghe) வார இறுதியில் கூறியிருந்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இளம் தொழில் வல்லுநர்களிடம் பேசிய ரணில் விக்கிரமசிங்க,
அரசாங்கம் ரூ. 800 பில்லியன் வருவாய் இழந்து தற்போது ரூபாய் பற்றாக்குறையையும் எதிர்கொண்டு வருகின்றது.
“எங்கள் கடனை இப்போது திருப்பிச் செலுத்த முடியவில்லை. எனவே நாம் முதலில் கடனைத் திருப்பிச் செலுத்தும் கட்டமைப்பை உருவாக்க வேண்டும்” என்று அவர் இதன்போது கூறினார்.
மேலும் பேசிய அவர்,
அரசாங்கம் தேவையற்ற செலவினங்களைக் குறைத்து, மக்களுக்கு தேவையான நிவாரணங்களை வழங்க வேண்டும் எனவும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் தனது வருவாயை அதிகரிக்க வேண்டுமானால் எரிபொருள் போன்ற பொருட்களின் விலை அதிகரிக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.
“அரசாங்கம் வாங்கிய கடன் நிலுவையில் உள்ளதால் உள்ளூர் வங்கிகள் வீழ்ச்சியடையும் வாய்ப்பை எதிர்கொண்டன.
இந்தப் பிரச்சினைகளுக்கு அதிகபட்சம் ஓரிரு வருடங்களில் தீர்வு காண முடியும்” என முன்னாள் பிரதமர் மேலும் தெரிவித்தார்.
ஒரு முறை மாற்றத்திற்கு கல்வியில் புதிய அணுகுமுறை தேவைப்படும் என்று விக்கிரமசிங்க விளக்கினார். இந்த புதிய கல்வி வழிகளைத் தொடர இளைஞர்களுக்கு நிதியுதவி அளிக்க வேண்டும் என்றார்.
அரசியல் ஸ்தாபனத்தின் விலையும் நிவர்த்தி செய்யப்பட வேண்டும் என்று முன்னாள் பிரதமர் விளக்கினார்.
மேலும் இளைஞர்களை அரசியலில் அனுமதிப்பது குறித்து கவனம் செலுத்த வேண்டும் எனவும் இதன்போது கூறியுள்ளார்.