நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் செயலிழந்துள்ள மின் கட்டமைப்பை சீர் செய்வதற்கு மேலும் சில நாட்கள் தேவைப்படுவதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
தற்போது 3 மணி நேரமும் 20 நிமிடங்களும், நாடு முழுவதிலும் அமுலாக்கப்படும் மின் துண்டிப்பு காலம் மேலும் அதிகரிக்கப்படமாட்டாது என அந்த சபை குறிப்பிட்டுள்ளது.
நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் குறித்த மின் கட்டமைப்பு செயலிழந்துள்ளமையினால் 270 மெகாவோட் மின்சாரம் தேசிய மின்கட்டமைப்பிற்கு இல்லாது போயுள்ளது.
அதனை சீர் செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இலங்கை மின்சார சபை குறிப்பிட்டுள்ளது.