அக்கரைப்பற்று கடற்கரைப் பகுதியை அண்டிய மக்கள் குடியிருப்புப் பகுதிக்குள் இன்று அதிகாலை கடல் நீர் புகுந்தமையால் மக்கள் மத்தியில் சுனாமி அச்சம் ஏற்பட்டது.
இதன் காரணமாக அப்பகுதியில் பதற்ற நிலையும் தோன்ற்றியுள்ளது. அக்கரைப்பற்று மீராநகர் பிரதேசத்தில் வழமைக்கு மாறாக கடல் அலைகளின் தாக்கம் அதிகரித்து கடல் நீர் கடற்கரையிலிருந்து சுமார் 100 மீற்றர் தூரத்துக்கு அப்பால் உள்ள நிலப் பகுதிக்குள் புகுந்துள்ளது.
கடலிநீர் மக்கள் குடியிருப்புப் பிரதேசத்துக்குள்ளும் புகுந்தமையால் அப்பகுதியில் பதட்ட நிலை ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதேவேளை இ கடல் நீர் கடற்கரைப் பிரதேசத்தில் அமைக்கப்பட்ட பிரதான காபட் வீதியையு ம் தாண்டி நிலப்பரப்பில் புகுந்தமையினால் கடற்கரையில் தரித்து வைக்கப்பட்ட படகுகள், சிறியரக வள்ளங்கள் மற்றும் கடற்றொழில் உபகரணங்கள் போன்றன கடல் நீரில் அடித்துச் செல்லப்பட்டதாகவும் மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.