பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ் மக்களிடம் அறிமுகமாகி பின் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக உலா வருபவர் தான் இலங்கைப் பெண் லொஸ்லியா.
ப்ரெண்ட்ஷிப் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகம் ஆனார், அதனைத் தொடர்ந்து தற்போது இவர் இயக்குனர் சபரீஷ் சரவணன் இயக்கத்தில் கூகுள் குட்டப்பா படத்தில் தர்சனுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
இப்படத்தினை கே எஸ் ரவிக்குமார் தயாரித்துள்ளார். இப்படம் கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகியது.இப்படத்தின் ப்ரோமோஷன் விழாவில் கலந்துகொண்ட நடிகை லொஸ்லியவை கேமிரா இருப்பதை மறந்து மிரட்ட வந்து பேச்சை மாற்றினார் கேஎஸ் ரவிக்குமார் .
ஏனெனில் நிகழ்ச்சிக்கு நடிகை லாஸ்லியா தாமதமாக வந்ததால்,இப்பதான் வாரீங்களா என கோவமாக கேட்ட கே எஸ் ரவிக்குமார் ,கேமிரா இருப்பதை அறிந்து சுதாரித்து கொண்டு நானும் இப்பொழுதுதான் வந்தேன் என கூறியுள்ளார்.இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் கே எஸ் ரவிக்குமார் இவ்வளவு கோவக்காரரா பார்த்தா அ ப்படி தெரியலையே என கமெண்ட் செய்து வருகின்றனர்.