அநுராதபுரம் இபலோகம பிரதேசத்தில் அமைந்துள்ள லங்கா ஐஓசி எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளரின் வீடு தீவைக்க்பபட்டுள்ளது.
நேற்றிரவு ஒரு குழுவினரால் இந்த வீடு தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது. அனுராதபுரம் திலகபுரத்தில் உள்ள வீடே இவ்வாறு தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
இவரது எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு நேற்று பாரிய அளவிலான மக்கள் எரிபொருள் பெற வந்திருந்தனர். ஆனால், போதிய எரிபொருள் இல்லாததால், சிலருக்கு எரிபொருள் கிடைக்கவில்லை. ஆத்திரமடைந்த மக்கள் நேற்றிரவு எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளரின் வீட்டிற்கு தீ வைத்துள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.
சம்பவத்தின் போது எரிபொருள் நிரப்பு நிலையத்தில் உரிமையாளரும் அவரது மனைவியும் இரண்டு பிள்ளைகளும் வீட்டில் இருந்துள்ளனர்.
அப்பகுதியில் வசிப்பவர்கள் உடனடியாக தீயை அணைத்ததாகவும், தீயில் பல சொத்துக்கள் எரிந்து நாசமானதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவற்றில் எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளரின் இரண்டு பிள்ளைகளின் பாடசாலை உபகரணங்கள் மற்றும் புத்தகங்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளரின் மகன் ஒருவர் நாளை ஆரம்பமாகவுள்ள க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.