நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை காரணமாக சுமார் 30 வீதமான ஆடைத் தொழிற்சாலைகள் வேறு நாடுகளில் அமைக்கப்பட்டு வருவதாக வர்த்தக வலய ஊழியர்களுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது.
ஏற்றுமதி பொருட்களை சந்தைக்கு வெளியிட முடியாத நிலை, மூலப்பொருட்களை இறக்குமதி செய்ய முடியாத நிலை மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு போன்றனவே இதற்கு காரணம் என அதன் அழைப்பாளர் காமினி ரத்நாயக்க தெரிவித்தார்.
எரிபொருள் நெருக்கடி காரணமாக ஆடைத் தொழிற்சாலைகளின் ஒட்டுமொத்த உற்பத்தி நடவடிக்கைகள் வெகுவாகக் குறைந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இன்று (24) அதிகாலை 3 மணி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.