ஆறு வாரங்களுக்குள் இடைக்கால வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
சர்வதேச ஊடகமான ரொய்ட்டர்ஸிற்கு வழங்கிய நேர்காணலில் இதனை குறிப்பிட்டுள்ளார்.
நெருக்கடிக்கு தீர்வு காண பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால், நாட்டில் பணவீக்கம் மேலும் அதிகரிக்கலாம்.
மேலும், எதிர்ப்புக்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும், தேவையற்ற மோதல்களாக போராட்டங்கள் விரிவடையும் என்று அரசாங்கம் எதிர்பார்க்கவில்லை என்றும் பிரதமர் தெரிவித்தார்.
எதிர்காலம் மிகவும் கடினமானது. போராட்டங்கள் இருக்கும். மக்கள் பிரச்சினைகளை சந்திக்கும் போது போராட்டங்கள் நடத்தப்படும். ஆனால் நாட்டின் அரசியல் சூழ்நிலையை சீர்குலைக்க அனுமதிக்காது என குறிப்பிட்டுள்ளார்.