உதிரி பூக்கள் என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் காமெடியனாக அறிமுகமானவர் நடிகர் குமரிமுத்து. ரஜினி, கமல் என தொடங்கி அஜித், விஜய் என பலரது படங்களில் நடித்துள்ளார்.
கடைசியாக அவர் 2009ம் ஆண்டு வெளிவந்த விஜய்யின் வில்லு படத்தில் நடித்தார்.
மறைந்த குமரிமுத்து
தனது தனி சிரிப்பு மூலம் மக்களின் மனதில் பெரிய இடத்தை பிடித்த அவர் தனது 75வது வயதில் பிப்ரவரி 29ம் தேதி உயிரிழந்தார். குமரிமுத்துவின் உடல் சென்னை மந்தைவெளியில் உள்ள கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
அந்த கல்லறையில் Its Time For The God, To Enjoy His Laughter என்று வசனம் பொறிக்கப்பட்டுள்ளது.
குமரிமுத்து மகள்
இந்த நேரத்தில் நடிகர் குமரிமுத்துவின் மகள் எலிசபெத் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வருகின்றன. அட நம்மை சிரிப்பின் மூலம் மகிழ நடிகரின் மகளா இவர் என ரசிகர்கள் அவரது வருங்காலத்திற்கு வாழ்த்து கூறி வருகிறார்கள்.