கிவி பழம் அடிக்கடி சாப்பிடுபவர்களுக்கு கல்லீரலில் தேங்கியிருக்கும் நச்சுகள் நீங்க பெற்று கல்லீரல் பலம் பெறும். இன்று கிவி, ஆப்பிள், வாழைப்பழம் சேர்த்து சாலட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
வாழைப்பழம் – 1
கிவி பழம் – 2
ஆப்பிள் – 1
சின்ன வெங்காயம் – 6
எலுமிச்சை சாறு – 1 டீஸ்பூன்
தேன் – 1 டீஸ்பூன்
புதினா – சிறிதளவு
உப்பு – ஒரு சிட்டிகை
முந்திரி – 6
மிளகு தூள் – தேவைக்கு
செய்முறை :
கிவி, ஆப்பிள், வாழைப்பழத்தை தோல் நீக்கி வட்ட வடிவில் வெட்டிக்கொள்ளவும்.
சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.
புதினாவை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
முந்திரியை கொரகொரப்பாக பொடித்து கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் வெட்டிய கிவி, ஆப்பிள், வாழைப்பழம், சின்ன வெங்காயத்தை போட்டு நன்றாக கலக்கவும்.
பின்னர் அதனுடன் நறுக்கிய புதினா, தேன், உப்பு, மிளகு தூள், எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலக்கவும்.
கடைசியாக பரிமாறும் போது கொரகொரப்பாக பொடித்த முந்திரியை தூவி பரிமாறவும்.
சூப்பரான கிவி ஆப்பிள் வாழைப்பழ சாலட் ரெடி.