கிளிநொச்சி மாவட்ட மக்கள் அமைப்பின் ஏற்பாட்டில் பிரித்தானியா எடின்புரோ நகரத்தில் நடைபெறும் வடக்கு, கிழக்கு மாகாண மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கான நிதி சேகரிப்பு மற்றும் மரதன் ஓட்ட நிகழ்வுக்கு வலுசேர்க்கும் முகமாக கிளிநொச்சியிலும் மரதன் ஓட்ட நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
குறித்த மரதன் ஓட்ட நிகழ்வு பரந்தன் சந்தியிலிருந்து பசுமை பூங்கா வரை முன்னெடுக்கப்பட்டது.
நிகழ்வில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்
ஆண், பெண் இருபாலருக்கும் மரதன் ஓட்டப்போட்டி நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். குறித்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும் கலந்து கொண்டிருந்தார்.
அங்கு உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், அரசியலுக்கும் மரதனுக்கும் நிறையத்தொடர்பு உண்டு என் நான் இவரு கூறுகின்றேன் என்றால் நீண்ட நேரம் நின்று பிடிக்க வேண்டும் மரதன் வாழ்க்கைக்காகப் பல தத்துவங்களைக் கொண்டுள்ளது என தெரிவித்தார்.