கொழும்பு காலி முகத்திடலில் கடந்த மே மாதம் 09 ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதல்கள் தொடர்பில் 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
இதுவரை 12 நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
கோட்டா கோ கம தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் கைது
நாடளாவிய ரீதியில் ஒரே நாளில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் இதுவரை 2056 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
அவர்களில் 900 க்கும் மேற்பட்டவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்று பேச்சாளர் தெரிவித்துள்ளார்.