கடவுச்சீட்டு மோசடி வழக்கில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த, விமல் வீரவங்சவின் மனைவி சஷி வீரவங்சவுக்கு கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.
சிறைத்தண்டனை
போலியான ஆவணங்களைச் சமர்ப்பித்து ராஜதந்திர கடவுச்சீட்டு பெற்றுக் கொண்டதாக குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவின் சஷி வீரவங்சவுக்கு இரண்டு வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.
கடந்த வெள்ளிக்கிழமை குறித்த வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்டதும் அவரது வழக்கறிஞர்கள் மேன்முறையீடு செய்து பிணை மனுவைத் தாக்கல் செய்திருந்தனர்.
பிணை மனு பரிசீலனை நேற்றைய தினம் எடுத்துக் கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
ஒத்திவைப்பு
எனினும் நேற்றைய தினம் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட பிணை மனு இன்றைய தினம் வரை ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.
இதன்போது கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றம் சஷி வீரவங்சவுக்கு பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளது.